திமுக நிர்வாகினா தப்பு செய்ய லைசன்சா?... அறிவாலயா அராஜகம்..! போட்டு தாக்கிய தவெக அருண் ராஜ்..!
அறிவாலையே அராஜகவாதிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக தமிழக வெற்றி கழக கொள்கை பரப்பு குழுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான திருமண மண்டபத்திற்குள் அத்துமீறி நுழைந்து, மண்டபச் செயலாளர் மீது திமுக பகுதிச் செயலாளர் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி இருப்பதை தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு குழு செயலாளர் அருண்ராஜ் குறிப்பிட்டார்.
மண்டபச் செயலாளர் மூர்ச்சையாகிக் கீழே விழும் அளவிற்கு, திமுக நிர்வாகி கொலைவெறி கொண்டு தாக்குவது காண்போரை உறைய வைக்கிறது என்றும் தெரிவித்தார். 'திமுக நிர்வாகி' என்றாலே அனைத்துச் சட்டவிரோதச் செயல்களுக்கும் உரிமம் பெற்றவர்கள் என்ற எண்ணத்துடன் அவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறையினர் தட்டிக் கேட்க முடியாது என்பதாலேயே மோசடி, பித்தலாட்டம், அராஜகம், அடித்துப் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என தெரிவித்த அருண் ராஜ், இப்படிப்பட்ட அறிவாலய அராஜகவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் திராவிட முதலமைச்சர் ஸ்டாலின் என்று சாடினார்.
இதையும் படிங்க: அதிகார திமிரா? தோல்வி பயமா?.. நாங்கள் விதை..! TVK அருண்ராஜ் காட்டம்..!
இப்படிப்பட்ட ரவுடிக் கும்பலை வைத்துக்கொண்டுதான், "கட்டுப்பாடான கொள்கைக் கூட்டம்" என திமுக தலைமை பிதற்றுகிறது என்றார். திருமண மண்டபத்திற்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்து, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என காவல்துறையை அவர் வலியுறுத்தினார். மேலும், இதுபோன்ற அடாவடிகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் துணைநிற்கும் அதிகாரிகளும் விரைவில் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை என்றும் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அறிவாலய அராஜகவாதிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல் களம்..! அருண் ராஜ் தலைமையில் TVK தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம்..!