×
 

உலக அளவில் விசில் ட்ரெண்ட்..! தவறு நடந்தால் தவெக குரல் ஒலிக்கும்..! அருண் ராஜ் உறுதி..!

தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்திற்காக காத்துக் கொண்டிருப்பதாக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு குழுச் செயலாளர் அருண் ராஜ் கூறியுள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வாக நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் உத்திகள், தேர்தல் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் இடமாக இது அமைந்துள்ளது.

இந்தக் கூட்டம் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில், ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பங்கேற்ற விஜய்க்கு விசில் அடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜயும் தனது அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சியின் கொள்கை தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தி இருந்தார்.

இதனிடையே, செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு குழுச் செயலாளர் அருண்ராஜ் உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர் விஜய் மட்டுமே என அவர் தெரிவித்தார். திமுக ஆட்சியில் தவறு நடக்கும்போது தமிழக வெற்றி கழகத்தின் குரல் ஒலிக்கும் என்றும் தமிழக வெற்றி கழகத்தினர் களத்தில் சிறப்பாக பணியாற்றுகின்றனர் எனவும் கூறினார்..

இதையும் படிங்க: செந்தமிழ் காக்கும் சேனையை விஜய் தருவார்..! தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் உறுதி..!

உலக அளவில் விசில் ட்ரெண்ட் ஆகிவிட்டது என்றும் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்திற்கு காசு வாங்கிக்கொண்டு யாரும் வருவதில்லை எனவும் தெரிவித்தார். பெண்கள் தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் இருக்கிறார்கள் என்றும் தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர் பேசினார். 

இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி விஜய்..! இனி பஸ்ல கூட விசில் அடிக்க மாட்டாங்க..! செங்கோட்டையன் உரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share