×
 

செந்தமிழ் காக்கும் சேனையை விஜய் தருவார்..! தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் உறுதி..!

செந்தமிழை காக்கும் சேனை தேவைப்பட்டால் விஜய் தருவார் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வாக இன்று நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் உத்திகள், தேர்தல் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் இடமாக இது அமைந்துள்ளது.

இந்தக் கூட்டம் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில், ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் தொடங்கியது. செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் உரையாற்றினார். அப்போது, சாதி, மதம் மனிதனை ஒன்றிணைக்காது என்றும் தாய் தமிழ் மொழி தான் மனிதனை ஒன்றிணைக்கும் எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

ஹிந்தி மொழியை திணிப்பது என்பது அடக்கு முறையின் வடிவம் என்றும் ஹிந்தி, டெல்லியின் வடிவம் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டைப் போல தாய் மொழியை காப்பதற்கான ஒரு போர் உலகில் வேறு எந்த தேசத்திலும் நடந்தது இல்லை என்றும் கூறினார். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வகையில் மொழிக்காக தீக்குளித்த வரலாறு தமிழர்களுக்கு மட்டுமே உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி விஜய்..! இனி பஸ்ல கூட விசில் அடிக்க மாட்டாங்க..! செங்கோட்டையன் உரை..!

செந்தமிழை காக்கும் சேனை மீண்டும் தேவைப்பட்டால் தமிழக வெற்றி கழகம் தரும் என்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தருவார் என கூறினார். தமிழக வெற்றி கழகத்தின் விசில் ஓசை நல்ல ஓசை என்றும் இந்த நல்ல ஓசையை ஆசையாசையாய் எல்லா திசையிலும் ஒலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். விஜய் பேசுவதே இல்லை என்றும் ஆனால் எல்லோரும் விஜய் பற்றி தான் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். 

இதையும் படிங்க: உற்சாகத்துடன் தொடங்கிய தவெக செயல்வீரர்கள் கூட்டம்... மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மரியாதை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share