×
 

புதுச்சேரி தவெக புதிய நிர்வாகக் குழு அறிவிப்பு... 30 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் விஜய்!

புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க 30 நபர்கள் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை நியமித்துத் தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தற்போது அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் தனது அரசியல் ஆட்டத்தை டாப் கியரில் தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தின் அன்றாடக் கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க 30 பேர் கொண்ட புதிய மற்றும் வலுவான நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற உயர் காவல் அதிகாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் எனப் பல்துறை வல்லுநர்கள் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்திற்கான இந்தப் புதிய நிர்வாகக் குழுவில்  திரு. A. சையத் முகமது காசிம், திரு. K. புதியவன், திரு. V. சாமிநாதன் Ex. MLA, திரு. K.A.U. அசனா Ex. MLA, திரு. L. பெரியசாமி Ex. MLA,  திரு. VJ. சந்திரன் Rtd., IG., திரு. AG. வலந்தன், திரு. R. நிதேஷ் குமார், திரு. U. ராமு, திரு. N. மணிபாலன், திரு. V. பிரதீபன், திரு. S. பிரபு, திரு. S. ராஜசேகர், திரு. N. சந்திரசேகரன், திருமதி. M.K. சத்யா, திரு. K. செந்தில் குமார், திரு. N. வசந்தராஜா, திரு. M. சரவணன், திரு. A. சந்திரபாலன், திரு. B. யூசுப், திரு. P. வேல்முருகன், திரு. A. விஜி, திரு. T. சுகுமார், திரு. K. பாரதிதாசன், திரு. S. பிரான்சிஸ், திரு. J. கிளாட் பேட்ரிக், திரு. M. மணிகண்டன், திரு. G. குமரவேல், திரு. B. பாலசுதாகர், திரு. M. பிரிஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவானது கட்சியின் பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த் அவர்களுடன் இணைந்து, விஜய்யின் நேரடி வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மாநிலம் முழுவதும் தவெக-வின் செல்வாக்கை உயர்த்தவும், தேர்தல் பணிகளை முடுக்கிவிடவும் பணியாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விசில் பறக்கும் புதுச்சேரி... தமிழகத்தை தொடர்ந்து தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

இந்த அறிவிப்புடன் மற்றொரு மெகா செய்தியையும் விஜய் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் தவெக-வுக்கு ஒதுக்கப்பட்ட விசில் சின்னம், தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கும் பொதுச் சின்னமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றிச் சின்னமான விசில் சின்னம் நமக்கே கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது; வெற்றி நிச்சயம், நல்லதே நடக்கும் எனத் தனது அறிக்கையில் விஜய் ‘ஜோஷ்’ ஆகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் ஒரே சின்னம் கிடைத்துள்ளது, கட்சியின் அடையாளத்தை மக்களிடையே ‘வைரல்’ ஆக்க உதவும் எனத் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பக்கா டீம் மூலம், அங்குள்ள திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்குத் தவெக கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "KINGFISHER ❤️ MUMTAJ": ஒயின் வாங்கினால் பீர் ஃபிரீயாம்..!! ஆஃபருக்கு ஆப்பு வெச்ச கலால்துறை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share