×
 

விசில் பறக்கும் புதுச்சேரி... தமிழகத்தை தொடர்ந்து தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஏற்கனவே தமிழகத்தில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதுச்சேரியிலும் அதே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் சேர்த்து இந்தியத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை வழங்கியுள்ளது. கட்சியின் தலைவர் விஜய், விசில் என்பது மகிழ்ச்சியின் ஒலி மற்றும் சாமானிய மக்களின் கொண்டாட்டத்தோடு நெருங்கிய தொடர்புடையது என்று தனது விருப்பத்தைப் பகிர்ந்துள்ளார்.

விஜய்யின் புகழ்பெற்ற கோட் திரைப்படத்தில் இடம்பெற்ற விசில் போடு பாடல் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலம் என்பதால், இது கட்சியின் அடையாளத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எளிதாக இருக்கும். புதுச்சேரியில் மாநில அந்தஸ்து உள்ளிட்ட உள்ளூர் பிரச்சினைகளை தவெக கையில் எடுத்து வருகிறது. அங்கு நடைபெற்ற மெகா பொதுக்கூட்டம் கட்சியின் செல்வாக்கை நிரூபித்திருந்தது.

இதையும் படிங்க: விஜய் கொடுத்தது பிச்சை காசு திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அதிரடி பேட்டி!

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் ஒரே சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது, வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தைத் தவிர்க்க உதவும் மற்றும் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய பலத்தைச் சேர்க்கும். சின்னம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரி தவெக நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share