தலைவா… வந்துட்டியா! ஆரவாரத்தில் தடுப்புகளை தாண்டி எகிறி குதித்த தொண்டர்கள்...
மதுரை மாநாட்டிற்கு வருகை தந்த விஜயை கண்டதும் ஆரவாரத்தில் தடுப்புகளை எதிரி குதித்து தொண்டர்கள் விஜயிடம் சென்றனர்.
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சி. இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். காலை முதலே தொண்டர்கள் குவிய தொடங்கினர்.3 மணி அளவில் இரண்டாவது மாநில மாநாடு தொடங்கியது. விஜயின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோர் விழா மேடைக்கு வந்தனர்.
தொடர்ந்து பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாடல் ஒலிக்க விஜய் விழா மேடைக்கு வந்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து வரவேற்றார். தொடர்ந்து மாநாட்டில் தொண்டர்களை நோக்கி சென்று சந்திப்பதற்காக அமைக்கப்பட்ட ramp walk மேடையில் நடந்து சென்று கைகளை அசைத்தார். அப்போது தொண்டர்கள் தூக்கி எறியும் கட்சி துண்டுகளை தனது கழுத்தில் எடுத்து மாலையாக போட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: #BREAKING: அரங்கம் அதிர மதுரையில் விஜய்… சிறப்பு பாடலுடன் மாஸ் என்ட்ரி! குதூகலத்தில் தொண்டர்கள்..!
தொடர்ந்து தலையில் துண்டாக கட்டிக்கொண்டு தனது சந்தோஷத்தை விஜய் வெளிப்படுத்தினார். அப்போது விஜயை பார்த்து ஆரவாரத்தில் தடுப்புகளை எகிரி குதித்து தொண்டர்கள் வந்தனர். அவர்களை பௌசர்கள் தடுத்து நிறுத்தியும், அடங்காமல் விஜய்க்கு வணக்கம் செலுத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். பின்னர், 40 அடி கொடிக்கம்பத்தின் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பிறகு கட்சியின் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: பக்கா பிளான்! மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்ல ட்ரோன்... தவெக மாநாட்டு பணிகள் மும்முரம்