10 ஆயிரம் பேர் என எப்படி சொன்னீங்க? தவெகவுக்கு நீதிபதி சரமாரி கேள்வி…!
10 ஆயிரம் பேர் வருவார்கள் என எப்படி கணித்தீர்கள் என தவெகவுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என 41 உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அப்போது, தவெக தரப்பு கூறுகையில், விஜய் கூட்டத்திற்கு முதலில் 10,000 பேர் வருவார்கள் என காவலர்களிடம் கூறினோம் என தெரிவித்தது. 10,000 பேர் வருவார்கள் என எப்படி கூறினீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சம்பள நாள் என்பதால் யாரும் வரமாட்டார்கள் என்று கணித்தோம் என்றும் உழவர் சந்தை பகுதியில் பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்தோம் எனவும் தவெக தரப்பு கூறியது.
இதையும் படிங்க: மக்களை சந்திக்காத விஜய்... மனிதாபிமானமே இல்லை! MP கனிமொழி விளாசல்...!
மேலும், 23 ஆம் தேதி லைட்அவுஸ் கார்னர் பகுதியில் அனுமதி தருவதாக போலீஸ் கூறியது என்றும் கூறப்பட்டது. 4 மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வந்து இருந்ததாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறியது.
இதையும் படிங்க: #BREAKING: போலீஸ் வளையத்தில் விஜயின் வீடு... ரோட்ல நடக்க கூட கூடாதாம்!