#BREAKING: போலீஸ் வளையத்தில் விஜயின் வீடு... ரோட்ல நடக்க கூட கூடாதாம்!
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கரூரிலிருந்து உடனடியாக விஜய் சென்னை திரும்பிய நிலையில் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்றைய தினம் நீலாங்கரையில் இருந்து பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டுக்கு விஜய் சென்றிருந்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கும் வேதனை இருக்கும்… அவருக்கு என்ன பிரச்சனையோ! ஆதரவாக பேசிய சனம் செட்டி…!
பிறகு மீண்டும் நீலாங்கரை வீட்டிற்கு திரும்பினார். இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி, வெளியாட்கள் தெருவில் நுழைவதை போலீசார் தடை செய்துள்ளனர். விஜய்யின் வீட்டிற்குச் செல்லும் கேசினோ டிரைவ் சாலையில் வழக்கமாக நடந்து செல்பவர்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ப்ளீஸ்... இப்படி பண்ணாதீங்க! வதந்திகள் குறித்து முதல்வர் வேதனை...!