×
 

மக்களை சந்திக்காத விஜய்... மனிதாபிமானமே இல்லை! MP கனிமொழி விளாசல்...!

விஜய் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராது இருப்பதை கனிமொழி எம்பி விமர்சித்து உள்ளார்.

தமிழக அரசியலின் புதிய அலைகளைத் தாண்டி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பிரச்சாரங்களை தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜயின் பேச்சுகள் மக்களிடம் ஆவேசத்தை ஏற்படுத்திய போது, கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பரப்புரை கூட்டம் மிகப் பெரிய துயரமாக மாறியது. செப்டம்பர் 27, 2025 அன்று, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரம், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேரின் உயிரைப் பறித்தது.

இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் அடங்குவர். இந்தச் சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி, தேசிய அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கு முக்கிய குற்றச்சாட்டாக எழுந்தது, சம்பவம் நடந்த உடனேயே விஜய் அப்பகுதியை விட்டு விலகி சென்றது மற்றும் இதுவரை திரும்பி வந்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காதது.

இந்தக் குற்றச்சாட்டு, விஜயின் அரசியல் பெயரையும் கட்சியின் அமைப்பு திறனையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. இதற்கிடையில் விஜயின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விஜய் மக்களை சந்திக்காதது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: போலீஸ் வளையத்தில் விஜயின் வீடு... ரோட்ல நடக்க கூட கூடாதாம்!

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல் கட்சியின் தலைவர் அங்கிருந்து சென்றதுதன்னுடைய பாதுகாப்பை மட்டும் நினைப்பது, நிச்சயம் என்னைப் பொறுத்த வரைக்கும் இதுவரை பார்த்திராத ஒன்று என்று கூறினார். தலைவர், நிர்வாகிகள் என யாரும் மக்களுக்கு உதவ வராதது அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை என்பதை காட்டுகிறது என்றும் விமர்சித்தார்.

இதையும் படிங்க: விஜய்க்கும் வேதனை இருக்கும்… அவருக்கு என்ன பிரச்சனையோ! ஆதரவாக பேசிய சனம் செட்டி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share