அன்று ஆடு திருடியவர்... இன்று அரசு வழக்கறிஞர்... சந்தி சிரிக்கும் தவெக ஆட்சியின் மாற்றம்...!
சிவில் வழக்குகள் தொடர்பாக அரசு தரப்பில் வழக்காடுவதற்காக, முதன்மை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாணியம்பாடியில் ஆடு திருடிய வழக்கில், குற்றஞ்சாட்பட்ட வழக்கறிஞர், தமிழக வெற்றிக்கழக ஆட்சியில், திருப்பத்தூர் நீதிமன்ற முதன்மை வழக்கறிஞராக நியமனம். திருப்பத்தூர் மாவட்ட அரசு உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞராக நியமனம் செய்துள்ளனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட புதூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அஞ்சலா கணவனை இழந்து, ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில், அஞ்சலா கடந்த 17.09.2025 அன்று வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில், தான் வளர்த்து வந்த ஆடு காணவில்லையென புகார் அளித்த நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போது, அம்பலால் நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஷேக் சுல்தான் என்பவர், திருமலை என்பவருடன் சேர்ந்து, காரில் அஞ்சலாவின் ஆடுகளை திருடிச்சென்றது தெரியவந்த நிலையில், இதுதொடர்பாக வழக்கறிஞர் சுல்தான் மீது, வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்திருக்கும் நிலையில்,
தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சியில், ஆடு திருடிய வழக்கில் வழக்கறிஞர் ஷேக் சுல்தான், திருப்பத்தூர் நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், சிவில் வழக்குகள் தொடர்பாக அரசு தரப்பில் வழக்காடுவதற்காக, முதன்மை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: விட்டு விலகிச் செல்பவர்கள் போகட்டும்! ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி ஆவேசம்! தொண்டர்களுக்கு ஆறுதல்!
இதற்கு முன்னதாக அரசு வழக்கறிஞராக நியமிக்க 30 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவரும், தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளருமான ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "அவல ஆட்சி"..! காவல்துறைக்கே பாதுகாப்பில்ல... தவெகவை பந்தாடிய நயினார்..!