×
 

சுங்கக் கட்டண உயர்வு..! மத்திய அரசின் கைப்பாவையா தமிழக அரசு..? கொந்தளித்த வேல்முருகன்.!!

சுங்கக்கட்டணம் தொடர்பாக வேல்முருகன் பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.

தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு ஏற்படும் என்ற செய்திகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார். சாலை அமைப்பதற்காக விதிக்கப்பட்ட சுங்கக் கட்டணம், சாலை அமைத்த செலவைத் தாண்டியும் பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஒப்பந்தக் காலமே முடிவடைந்த சுங்கச்சாவடிகள்கூட இன்னும் தொடர்ந்து கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.ஒப்பந்தக் காலம் முடிவடைந்த சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி பலமுறை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்த வேல்முருகன், மக்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாமல் ஆண்டுதோறும் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்தின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், சுங்கக் கட்டண உயர்வு நேரடியாகவே பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.மக்களிடம் வசூலிப்பதில் மட்டும் வேகம் காட்டும் ஒன்றிய அரசு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவதில் ஏன் தயக்கம் காட்டுகிறது என்றும், தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கப்படும் இந்த சுங்கக் கொள்ளைக்கு மாநில அரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு!

எனவே, சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன், ஒப்பந்தக் காலம் முடிவடைந்த அனைத்து சுங்கச்சாவடிகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இக்கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்தால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, மக்கள் பங்கேற்கும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் அவர் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கைப்பாவையா தமிழக அரசு என்றும் கேட்டுள்ளார்.

 

இதையும் படிங்க: முதல்வர் விஜயை சந்தித்த மாணிக்கம் தாகூர்..! நாடாளுமன்ற நிலை குழு கூட்டம்... தீவிர ஆலோசனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share