கொங்கு மண்டலத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் விஜய்..!! அவினாசி, பெருமாநல்லூரில் இன்று அனல் பறக்க பிரச்சாரம்..!!
அவினாசி, பெருமாநல்லூரில் தவெக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
திருப்பூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் விஜய் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக அவினாசி செல்லவிருக்கிறார்.
திட்டமிட்டபடி, மதியம் 3 மணியளவில் ஆட்டையாம்பாளையம் பகுதியிலிருந்து பிரசார வாகனத்தில் புறப்பட்டு, அவினாசி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரோடு ஷோ நடத்தி, வேனில் நின்றவாறு தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார். அதன்பிறகு தேசிய நெடுஞ்சாலை வழியாக பெருமாநல்லூர் நால்ரோடு பகுதிக்கு சென்று அங்கும் பொதுமக்களிடையே பிரசாரம் செய்யவிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து பூலுவப்பட்டி வரை ரோடு ஷோ மேற்கொண்டு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்துப் பேச உள்ளார். தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பிரசாரம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!
விஜய்யின் பிரசாரத்தை முன்னிட்டு அவினாசி, பெருமாநல்லூர் மற்றும் பூலுவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலைகள் மற்றும் பிரசாரப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, தர்மபுரி மாவட்டத்தில் இன்று திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் பிரசார நிகழ்ச்சியை தமிழக வெற்றிக் கழகம் திடீரென ரத்து செய்து அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். விஜய்யின் இன்றைய பிரசாரம் திருப்பூர் மாவட்டத்தில் தவெகவுக்கு கணிசமான ஆதரவைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் விஜய்யின் வருகையை எதிர்நோக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!