×
 

குதிரை பேரும் பேசியது யார்? - இபிஎஸை டைரக்ட்டா பொளந்தெடுத்த செங்கோட்டையன்...!

அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி நடந்து இருக்கிறதா.?

ஈரோட்டில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டு காலத்தில் 38 சதவீதம் வாக்குகளை பெற்று வரலாறு படைத்து இருக்கின்ற தலைவர் விஜய் தனித்து நின்று மாபெரும் வெற்றியை பெற்றிருக்கின்றார். மக்கள் விரும்பும் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

 குதிரை பேரும் நடந்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் சொல்கின்றனர் குதிரை பேரும் பேசியது யார்.?, திமுகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஆகலாம் என்று சொன்னது யார்.?, அதிமுகவிற்கும் திமுகவிற்கும் இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி நடந்து இருக்கிறதா.?, ஜெயலலிதாவை வழக்கு போட்டு சிறையில் அடைத்தவர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் ஆவேன் என்று சொன்னால் அவர் உண்மையில் அதிமுக தானா என்பது தான் என் கேள்வி.?

 குதிரை பேரம் யார் நடத்தினார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து இருக்கின்றார்கள். அவர்கள் ராஜினாமா செய்வதற்கு அதிமுக திமுகவுடன் கூட்டணி வைப்பதாக கூறியதுதான் காரணம். இது தமிழ்நாட்டின் வரலாற்றில் நடைபெறாத ஒன்று ஆகையினால் தான் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்கள். எங்களுக்கு குதிரை பேரம் தேவையில்லை. தனித்து நின்று வெற்றி பெற்றிருக்கின்றோம். பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை உருவாக்கி இருக்கும் மக்கள் இயக்கமாக இருக்கின்றோம். அதிமுகவினர்  குதிரை பேரம், லாட்டரி பேரம் நடந்ததாக சொல்கின்றனர். இதற்கெல்லாம் சட்டமன்றம் பதில் சொல்லுவோம்.

இதையும் படிங்க: தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

 பெருந்துறை தொகுதியில் என்னென்ன திட்டங்கள் தேவையோ மக்கள் நலன் கருதி நிறைவேற்றுவோம். மேகதாது பிரச்சினைக்கு  அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுமா? டெல்லியில் அதற்கான கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மீனவர் பாதுகாப்பு மற்றும் பல்வேறு  தேவைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அனைவரும் ஆறு மாதம் பேச  மாட்டோம் என்று சொன்னார்கள் ஆனால் ஆறு நாட்களில் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என துடிப்புடன் சொல்கின்றனர்.

 அதிமுகவின் அடிப்படை உணர்வு கொண்ட அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள், சில பேர் மட்டுமே இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால் வர இயலாது மற்ற தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கை தவறு என்று சொல்லி வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் இரண்டாம் கட்ட பொறுப்பாளர்கள் அதில் நீடிப்பது சரியாக இருக்காது என்று கூறிக்கொண்டு தவெக இணைய வருகின்றனர் எனக்கூறினார். 

இதையும் படிங்க: "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share