கரூர் சம்பவம் எதிரொலி! விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு... தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
கரூர் சம்பவத்தின் எதிரொலியாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அலை என்று கருதப்படும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்தப் பிரச்சாரப் பயணம், செப்டம்பர் 13 அன்று திருச்சி மாவட்டத்தில் இருந்து தொடங்கி, டிசம்பர் 20 வரை சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. விஜய்யின் சுற்றுப்பயணம், மக்களுடன் நேரடி சந்திப்புகள் மற்றும் பொது மக்கள் சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர்.
பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மிகப்பெரிய துயரச் சம்பவம் நிகழ்ந்த நிலையில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: இதெல்லாம் தலைவன் செய்யுற வேலையா... கோழைத்தனம்! விஜயை விமர்சித்த நடிகர் S.V. சேகர்...!
நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 ஆயிரம் பேர் என எப்படி சொன்னீங்க? தவெகவுக்கு நீதிபதி சரமாரி கேள்வி…!