இதோ வந்துட்டாங்க-ல! கரூரில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிப்பதில் சிக்கல்…!
கரூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சிக்கல் இருப்பதால் மாற்று இடம் தேர்வு செய்ய காவல்துறை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல கட்சி தலைவர்கள் தங்களது சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முன்னதாக விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். விரைவில் விஜய் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திருச்சியில் தனது முதல் சுற்று பயணத்தை தொடங்கிய விஜய் தொடர்ந்து அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய் பிரச்சாரத்தை காண அலைக்கடலென தொண்டர்கள் குவிந்தனர். வரலாறு காணாத கூட்டம் காரணமாக தனது பெரம்பலூர் சுற்றுப்பயணத்தையே விஜய் ரத்து செய்துவிட்டார். தொடர்ந்து நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் நடத்தினார்.
இந்த நிலையில் கரூரில் விஜய் சுற்றுப்பயணம் நடத்த உள்ளார். கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிசைன் டிசைனா யோசிக்கிறாங்கயா… விஜய் CM ஆக வேண்டும் எனக் கூறி சென்னை வரை பாதயாத்திரை வந்த ரசிகர்…!
பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று இடம் தேர்வு செய்ய வலியுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரத்திற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாகவும் நிபந்தனை இன்றி அனுமதிக்கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது விஜய்க்கு சரமாரி கேள்விகளை முன் வைத்த நீதிமன்றம், அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியையும் முன் வைத்திருந்தது. அதிக அளவில் கூட்டம் கூடுவார்கள் என்பதால் தற்போது கரூரில் மாற்றிய இடம் தேர்வு செய்ய காவல்துறை அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீமான்... அந்த அணிலு? செல்வப் பெருந்தகை கேள்வியால் சிரிப்பலை...!