×
 

விஜய் கரூர் செல்லத் திட்டம்? நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை...!

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் விஜய் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

விஜயின் கரூர் சுற்றுப்பயணம் சோகத்தில் முடிந்தது. யாரும் எதிர்பாராத வகையில் நாட்டையே உலுக்கும் துயரச் சம்பவம் அரங்கேறியது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆளும் திமுக அரசு காரணம் என ஒரு பக்கமும் விஜயின் தாமதமே முதல் காரணம் என்று மறுபக்கமும் பேசப்பட்டு வருகிறது.

இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்கவே இல்லை என்றும் அவர் கட்சியின் நிர்வாகிகள் கூட பாதிக்கப்பட்ட மக்களை அணுகவில்லை என்ற பகிரங்க குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்ட வருகிறது. விஜய் நிச்சயம் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கரூர் கோரச் சம்பவம்... அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள்... இனிமே இவர் தான் விசாரிக்க போறாராம்...!

இந்த நிலையில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு புறப்பட்டார். 3வது நாளாக தொடர்ந்து பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு செல்லும் விஜய், நிர்வாகிகளுடன் விஜய் 3வது நாளாக ஆலோசனை நடத்துகிறார். கரூர் நிலைமை மற்றும் அங்கு செல்வது குறித்து விரிவான ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அன்புமணி தரப்பால் ராமதாஸுக்கு அச்சுறுத்தல்... தலைமைச் செயலாளரிடம் முறையிட்ட எம்எல்ஏக்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share