×
 

மீனவர்கள் கைது விவகாரம்... LETTER போதுமா முதல்வரே? மீனவ சொந்தங்களை மீட்க விஜய் வலியுறுத்தல்..!

மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என விஜய் வலியுறுத்தினார்.

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை என்றும் அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிப்பதாகவும் கூறினார். மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடி வருவதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா என்றும் இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது எனவும் விஜய் சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.

இதையும் படிங்க: விஜய்க்கு கொள்கை இருக்கா?... தவெகவை லெப்ட் ஹேண்டில் தட்டிவிட்ட நயினார் நாகேந்திரன்...!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமி­ழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரையும் உரிய முறையில் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்றும் மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், மத்திய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அடுத்த விக்கெட்..! விஜய் கட்சியில் இணைந்த அதிமுக EX.MLA..! ஷாக் மேல ஷாக்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share