×
 

என்ன நடந்தாலும் விஜய் பக்கம் தான்..! சர்ச்சைகளை LEFT HAND- ல் டீல் செய்யும் பெண்கள்..!!

என்ன நடந்தாலும் விஜய்க்கு தாங்கள் ஆதரவு அளிப்போம் என பெண்கள் கூறுகின்றனர்.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள விவாகரத்து சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் குடும்பப் பிரச்சினையாக மட்டும் இல்லாமல், அவரது அரசியல் பயணத்தின் மீது கேள்விகளை எழுப்பும் வகையில் மாறியுள்ளது. குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பு, குடும்ப மதிப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றை முன்னிலைப்படுத்தி ஆட்சி அமைக்க வேண்டும் என்று விஜய் தொடர்ந்து பேசி வரும் சூழலில், இந்த விவகாரம் அவருக்கு எதிரான விமர்சனங்களை தீவிரப்படுத்தியுள்ளது.

சங்கீதா, விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சமீபத்தில் வெளியானதால், 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முடிவு கட்டும் நிலை உருவாகியுள்ளது. மனுவில், 2021 ஏப்ரல் மாதம் விஜய் ஒரு நடிகையுடன் தவறான உறவில் ஈடுபட்டதை கண்டுபிடித்ததாகவும், அது தனக்கு ஆழமான மன உளைச்சலையும், மனரீதியான கொடுமையையும் ஏற்படுத்தியதாகவும் சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விஜய் பலமுறை சுமுகமாக பிரிந்து செல்ல ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும், அரசியல் சூழலை கருத்தில் கொண்டு தான் அமைதியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், நீலாங்கரை வீட்டில் தன்னை அனுமதிக்க விஜய் மறுப்பதாகக் கூறி, வழக்கு முடியும் வரை அங்கு தங்க அனுமதி கோரி புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இதனால், ஜீவனாம்சம், சொத்து பங்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் விமர்சனங்களை சந்திக்கிறது. விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று மகளிர் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. விஜயின் விவாகரத்து விஷயத்தையும் மகளிர் தின கொண்டாட்டத்தையும் ஒப்பிட்டு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: உங்க விஜய்ங்க... நம்ம தளபதி... மாமல்லபுரத்தில் ஆர்ப்பரித்த மகளிர் படை..!!

ஆனால் விஜய்க்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும் என்று பெண்கள் கூறுகின்றனர். முன்பே தாக்கல் செய்யப்பட்ட மனு விவகாரம் தற்போது வெளிவர காரணம் என்ன என்றும் இது அவரது தனிப்பட்ட விஷயம் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர். என்ன நடந்தாலும் விஜய்க்கு தாங்கள் ஆதரவு தருவோம் என்றும் கூறுகின்றனர். பல்வேறு சர்ச்சைகளை விஜய் சந்திக்கும் நிலையில் அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்று உறுதிப்பட உள்ளனர். 

இதையும் படிங்க: களைக்கட்டிய மகளிர் தின கொண்டாட்டம்... சிலம்பம் சுற்றி அசத்திய சிறுமி.. அசந்து போய் பாராட்டிய விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share