வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

உங்க விஜய்ங்க… நம்ம தளபதி… மாமல்லபுரத்தில் ஆர்ப்பரித்த மகளிர் படை..!!

தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் தின கொண்டாட்டத்தில் விஜய் குறித்த பாடல் பாடியதும் மகளிர் படை ஆர்ப்பரித்தது.

தமிழக வெற்றிக் கழகம் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தீவிரமாக பயணித்து வருகிறது. கட்சியின் தலைவர் தளபதி விஜய் தலைமையில், தனித்து போட்டியிடும் முடிவுடன் களமிறங்கியுள்ளது இந்த இயக்கம். தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தலைமையிலான குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துகளைத் திரட்டியது.

பிப்ரவரி முதல் இந்தப் பணிகள் தீவிரமடைந்தன. பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் சந்திப்புகள், பரப்புரைகள் நடைபெற்று வருகின்றன. திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, மக்களுக்கான நல்லாட்சியை வழங்குவதாக விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஊழல் இல்லாத ஆட்சி, வேலைவாய்ப்பு உத்தரவாதம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தேர்தல் களம் நான்கு முனைப் போட்டியாக மாறியுள்ளது.

இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தின கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் செந்தில் – ராஜலட்சுமி தம்பதியின் இசைக்கச்சேரி நடைபெற்றது.

இதையும் படிங்க: களைக்கட்டிய மகளிர் தின கொண்டாட்டம்… சிலம்பம் சுற்றி அசத்திய சிறுமி.. அசந்து போய் பாராட்டிய விஜய்..!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்காக “ உங்க விஜய்ங்க… நம்ம தளபதி..” என்ற பாடலை பாடினர். அப்போது அரங்கத்தில் கூட இருந்த பெண்கள் அனைவரும் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். துள்ளல் இசை கச்சேரியுடன் கலைக்கட்டிய நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்திய அனைவருக்கும் விஜய் மரியாதை செய்தார். தொடர்ந்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: விவாகரத்து விஷயம்..!! விஜய் இமேஜை திமுக கெடுக்க பாக்குது… குண்டைத் தூக்கிப் போட்ட செல்லூர் ராஜு..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी