விஜய் பரப்புரையின்போது விபத்து..! தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்குகள்..!!
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சார மேற்கொண்டு வருகிறார். பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார். நேற்றைய தினம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.
எதிர்பாராத வகையில் அலைக்கடலென மக்கள் திரண்டனர். இந்த நிலையில் விஜய்யின் அடுத்த அடுத்த பிரச்சாரங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. நாளை காரைக்குடியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தினர் இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில், நேற்று நடந்த விஜய் பிரச்சார நிகழ்ச்சி என்பது ஐந்து விபத்துக்கள் ஏற்பட்டதாக கூறி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரி மக்களே..! விழிப்புடன் வாக்களியுங்கள்..! தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்..!!
நேற்றையதினம் நடந்த பிரச்சார நிகழ்ச்சிகள் அலைகடலென மக்கள் திரண்டனர். இந்த பிரச்சாரங்களின் போது ஐந்து விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக வழக்கு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட ஐந்து விபத்துக்கள் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 11 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து உள்ளனர்.
இதையும் படிங்க: சீமான் களமிறங்கிய காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்..! அனுமதி கொடுத்த போலீஸ்..!!