×
 

#TNElectionResults2026..! பாதுகாப்பு வளையத்தில் விஜய் வீடு..! பலத்த பாதுகாப்பு..!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நீலாங்கரை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் தீவிரமான நடவடிக்கைகள் நடைபெறும் நேரங்களில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் சென்னை நீலாங்கரை இல்லம் முழுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் பெரும் கூட்டம் கூடுவதைத் தடுக்கவும், ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விஜயின் இல்லத்தின் வெளியே துணை ஆணையர் ஒருவர், உதவி ஆணையர் ஒருவர், ஆய்வாளர் ஒருவர், உதவி ஆய்வாளர் ஒருவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இல்லத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன, அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், விஜய் இல்லத்திற்கு வரும் முக்கிய நுழைவாயிலான கபாலிஸ்வரர் பகுதியில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் கூடி, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் தடுக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களைப் பின்தொடர்ந்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: #TNElectionResults2026: வாக்கு எண்ணிக்கையில் தவெக அமோக முன்னிலை..!! மு.க.ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு..!!

ஊடக வாகனங்கள் உள்ளிட்டவை கூட தேவையின்றி அங்கு நிறுத்தப்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்செயலானவை அல்ல. தவெக தலைவராக விஜய் அரசியல் பயணத்தைத் தீவிரப்படுத்திய பின்னர், மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. CRPF வீரர்கள் அவரது இல்லம் மற்றும் பயணங்களில் தொடர்ச்சியான பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: #TNElectionResults2026..! சதமடித்தது TVK..! தொடர்ந்து முதலிடம்..! அடித்து நொறுக்கும் வேட்பாளர்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share