×
 

விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடத் தயாராகி வருகிறார். பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரங்களில் வலுவாக உள்ளது. இந்த நிலையில், அவரது பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரம்பூர் தொகுதி சென்னை வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக ஆர்.டி. சேகர் உள்ளார். தவெக நிர்வாகிகள் கூட்டங்களில் பெரம்பூரில் விஜய் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கட்சியின் உள்ளூர் செயல்வீரர்கள் இந்தத் தொகுதியை விஜய்க்கு உகந்ததாகக் கருதுகின்றனர். மேலும், திருச்சி கிழக்கு தொகுதியுடன் இணைத்து இரண்டு இடங்களில் அவர் களமிறங்கலாம் என்ற ஊகங்களும் உள்ளன. பெரம்பூர் சிறிய தொகுதியாக இருப்பதால், மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் மார்ச் 28ஆம் தேதி நாளை பெரம்பூரில் இருந்து விஜயின் தேர்தல் பரப்புரை பயணத்தைத் தொடங்க தவெக திட்டமிட்டிருந்தது. இதற்கான அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பெரம்பூர் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய் மேல CASE போடுங்க... கமிஷனர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..!!

பெரம்பூர் தொகுதியில் நாளை காலை 10 மணிக்கு MKB நகர் பேருந்து நிறுத்தம் அருகே பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த இடத்தில் 3 ஆயிரம் பேர் கூடமுடியாது என காவல் துறை கூறியதால் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாற்றிய இடம் கேட்டு விண்ணப்பம் தர காவல்துறை தரப்பில் அறிவுறுத்தபட்டு உள்ளது. தேர்தல் அறிவித்த பிறகு விஜய் நடத்தும் முதல் பிரச்சாரம் பெரம்பூரில் தொடங்க இருந்த நிலையில் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: சொன்ன TIME- க்கு வரணும்... மிஸ் ஆக கூடாது.!! விஜய்க்கு பறந்த வார்னிங்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share