#BREAKING: என்னோட அண்ணன் கேப்டன் விஜயகாந்த்.. மண் அதிர விண்ணதிர விஜய் மாஸ் ஸ்பீச்..!
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் உரையாற்றினார்.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரப்பத்தியில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நடக்கும் இந்த மாநாட்டில் அலை கடலென தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார் விஜய். அப்போது, சிங்கம் கர்ஜித்தால் எட்டு திசைக்கும் அதிரும்… அப்படி ஒரு சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வரும் வேடிக்கை பார்க்க வராது என பேசினார்
எப்போதும் சிங்கம் தனது தனித்தன்மையை இழக்காது., LION ALWAYS LION என தெரிவித்தார். ஒரு சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோமீட்டர் கேட்கும் என்று கூறினார். பாட்டி நான்கு பக்கத்திலும் ஒரு சிங்கம் தனக்கான எல்லையை தானே வகுத்துக் கொள்ளும் என்றார்.
இதையும் படிங்க: அப்பாடா விஜயை பார்த்தாச்சு! கொத்து கொத்தாக கலையும் கூட்டம்... காலியாகும் திடல்
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என அனைவருக்கும் தனது உயிர் வணக்கம் என தெரிவித்தார். வீரம் விளையும் மதுரை மா மண்ணை வணங்குவதாக தெரிவித்தார். தனக்கு எம்ஜிஆர் உடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் விஜயகாந்துடன் பழகும் வாய்ப்பு அதிகமாக கிடைத்ததாக தெரிவித்தார். விஜயகாந்தை எனது அண்ணன் என குறிப்பிட்ட பேசினார்.
பெண்ணுரிமை, மாநில உரிமைக்காக ஓங்கி ஒலிக்கும் குறள் இது என்றும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என சிலர் ஜோசியம் சொன்னார்கள் என்றும் தெரிவித்தார். அவர்கள் முடியாது என்பதை எல்லாம் நாம் நடத்தி வருகிறோம் தற்போது 2026 ஆட்சியைப் பிடிக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள் அதையும் நடத்திக் காட்டுவோம் என்றார். வரும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாக, நம்மை கோட்டைக்கு அனுப்ப போகும் ரூட் ஆக இருக்கும் என தெரிவித்தார். சினிமா என்னும் கலை ஆயுதத்தின் வழியே தோழர்களாக மாறியவர்களுக்காக எழும் உரிமை குரல் தன்னுடையது எனவே விஜய் தெரிவித்தார். மதுரை மண்ணில் கால் எடுத்து வைத்த உடனே எம்.ஜி.ஆரின் நினைவலைகள் தான் தனக்கு வந்ததாக கூறிய விஜய், ஜல்லிக்கட்டையும், மதுரை மீனாட்சி அம்மனையும் நினைவு கூர்ந்து பேசினார்.
இதையும் படிங்க: தலைவா… வந்துட்டியா! ஆரவாரத்தில் தடுப்புகளை தாண்டி எகிறி குதித்த தொண்டர்கள்...