கடின உழைப்பை முதலீடாக்கி முன்னேறுங்கள்..! +2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்றும் மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள். வெற்றி காணுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ராயல் சல்யூட்... தவெக தலைவர் விஜய் ஆதரவு!
வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துவதாக தெரிவித்துள்ள விஜய், விரைவில் சந்திப்போம்., வெற்றி நிச்சயம் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை..! நடிகர் பிரகாஷ்ராஜ் சுளிர் பேச்சு..!