"ஏய் ஜெயிலுக்குப் போறேன்... ஜெயிலுக்குப் போறேன் "... போலீசிடம் வாண்டடாக வம்பிழுத்த தவெக நிர்வாகி கணவர்...!
ஏய் ஜெயிலுக்கு போறேன்,ஜெயிலுக்கு போறேன்,ஜெயிலுக்கு போறேன் - வாண்ட்டடாக வந்து காவல் நிலையத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட தவெக பெண் நிர்வாகியின் கணவர்.
பல்லடம் காவல் நிலையத்தில் மது போதையில் காவல் துறை அதிகாரிகளுடன் மது போதையில் தகராறில் ஈடுபட்ட தவெக மகளிர் அணி நிர்வாகியின் கணவரால் பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் பகுதியை சேர்ந்தவர் அபிநயா தேவி.தவெக மகளிர் அணியில் நிர்வாகியாக இருந்து வருகிறார்.இவரது கணவர் சுந்தர மகாலிங்கம்.நேற்று அபிநயா தேவியின் ஏ.டி.எம் கார்டை எடுத்து சென்ற சுந்தர மாகலிங்கம் அதில் இருந்து நான்காயிரம் பணத்தை எடுத்து மது அருந்தியுள்ளார்.இது குறித்து அபிநயா தேவி கேட்ட போது அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் காயம் அடைந்த அபிநயா தேவி இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த அபிநயாதேவி இடம் மீண்டும் சுந்தர மகாலிங்கம் தகராறு ஈடுபட்டுள்ளார் அப்பொழுது அபிநயாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் போலீசார் உன்னை அழைத்து விசாரணை செய்வார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!
மது போதையில் இருந்த சுந்தர மகாலிங்கம் போலீஸ் என்ன என்னை கூப்பிடுவது நானே காவல் நிலையம் செல்கிறேன் எனக்கூறி காவல் நிலையம் வந்த சுந்தர மகாலிங்கத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மது போதையில் இருந்த சுந்தர மகாலிங்கம் காவலர் ஒருவர் தன்னிடம் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாக கூறி அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுந்தரமகாலிங்கம் ஒரு கட்டத்திற்கு மேல் காவலர்களை தரக்குறைவாகவும்,மரியாதை குறைவாகவும் பேசியுள்ளார்.அப்போது அங்கிருந்த பொதுமக்கள் சுந்தர மகாலிங்கத்திற்கு அறிவுரை கூறி வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் தொடர் தகராறில் ஈடுபட்டார்.
தவெக மகளிர் அணி நிர்வாகியின் கணவர் மது போதையில் காவல் நிலையத்தில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!