×
 

ஒரே நேரத்தில் இரண்டு ஆபத்து... இன்று முதல் வெளியானது முக்கிய எச்சரிக்கை... தாக்கு பிடிக்குமா தமிழகம்?

வங்க கடலிலும், அரபிக்கடலிலும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தாழ்வுப் பகுதி உருவாகி அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமான வலுவடையக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது. நேற்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அதேபோல் தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க: வெளுத்து வாங்க போகுது மழை... அனாவசியமா வெளிய வராதீங்க மக்களே..!

ஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலால் சென்னை, வட தமிழகம் மற்றும் டெல்டாவில் கடுமையான தாக்கம் இருக்கும்.

இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 22 அன்று, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டையில் கனமழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை... தடையில்லா மின்சாரம்!... தமிழக அரசு உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share