தமிழ்நாடு தாங்காது CM சார்..! என்ன DEEP SLEEP-ஆ..? விளாசிய உதயநிதி ஸ்டாலின்..!!
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளை முன் வைத்தார். கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது என கூறியுள்ளார். தமிழ்நாடு தாங்காது CM சார் என்று தெரிவித்தார்.
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது என கூறினார். இந்த Sofa Model அரசு அமைந்தது முதல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைன்னு குற்றங்கள் நடக்காத நாளே இல்ல என விமர்சித்து உள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு என்று தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க என்றும் நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மேகதாது விவகாரம்: உதயநிதி சைலன்ட் மோடில் இருப்பது ஏன்..?? மாணிக்கம் தாகூர் நறுக் கேள்வி..!!
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா..? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேண்டுமா என்று கேட்டுள்ளார். நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பயிர் கடன் தள்ளுபடி என SCAM.. ஏமாற ரெடியா இருக்கணுமா CM சார்..? உதயநிதி குற்றச்சாட்டு..!