“மத்திய அரசின் திட்டங்கள் வெறும் ஏமாற்று வேலை!” நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
தூத்துக்குடி ஏற்றுமதித் தேக்கம் மற்றும் ஜிஎஸ்டி விவகாரங்களில் ஒன்றிய அரசின் திட்டங்கள் மக்களை ஏமாற்றும் கண் துடைப்பு வேலை என்று நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கடுமையாகச் சாடியுள்ளார்
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவைச் சபாநாயகர் திரு. அப்பாவு, ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாகச் சாடினார். தூத்துக்குடி ஏற்றுமதித் தேக்கம், ஜிஎஸ்டி வரி நாடகம் மற்றும் தங்கம் விலை உயர்வு எனப் பல்வேறு விவகாரங்களில் ஒன்றிய அரசை அவர் தோலுரித்துக் காட்டினார்.
சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் முன்வைத்த முக்கியக் கருத்துகள், தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதாரத் தூணாக விளங்கும் இறால் மீன் ஏற்றுமதி தற்போது கடும் சரிவைச் சந்தித்துள்ளது. ஐரோப்பா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்துச் சந்தேகம் எழுப்பியுள்ள அவர், இந்தத் தேக்க நிலையால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிப்பதாக வேதனை தெரிவித்தார்.
வரியை அவர்களே ஏற்றிவிட்டு, பிறகு அவர்களேக் குறைத்துவிட்டு நாங்கள் வரியைக் குறைத்துவிட்டோம்' என்று தம்பட்டம் அடிப்பது மக்களை ஏமாற்றும் செயல் எனச் சபாநாயகர் சாடினார். இது முழுக்க முழுக்கத் தேர்தலை முன்னிட்டு மக்களைத் திசைதிருப்பப் போடப்பட்டத் திட்டமிட்ட ஒப்பந்தம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: “அவையில் தேவையில்லாமல் பேச கூடாது!” - எம்.பி-க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை!
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதற்குக் காரமானவர்கள் பிரதமருக்கு நெருக்கமானவர்களே என்று அதிரடியாகத் தெரிவித்தார். இதனால்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலையைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக அவர் விமர்சித்தார். சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைத் திட்டத்தில் ஒன்றிய அரசு மாயாஜாலம் காட்டி வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஊடகங்கள் அனைத்தையும் பாஜக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதால் உண்மைகள் மறைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தமிழக மக்களின் உண்மையானப் பாதிப்புகள் குறித்துப் பிரதமர் மோடியோ அல்லது அமித்ஷாவோ எப்போதாவது பேசியிருக்கிறார்களா? எனச் சவால் விடுத்தார். தமிழக மக்களின் நலனில் அக்கறையின்றித் தேர்தல் அரசியலை மட்டுமே ஒன்றிய அரசு முன்னெடுப்பதாகத் தனது பேட்டியில் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆவின் பால் விலை மறைமுக உயர்வு..!! சத்தமில்லாமல் கிரீன் மேஜிக்+ விற்பனை..?? மக்கள் கொந்தளிப்பு..!!