×
 

“அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

பள்ளிக்கூடங்கள் மினி ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறுகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி நேரத்தில் அருகில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலமைச்சர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்தியானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் ரீல்ஸ், அரசு நிகழ்ச்சிகளில் டான்ஸ், உச்சபட்சமாக பள்ளி மாணவர்களிடம் தவெக தலைவர் விஜய் சாங்ஸ் என கல்விக் கூடங்களை, அரசு நிகழ்ச்சிகளை ஒரு மினி ஷூட்டிங் ஸ்பாட்டுகளாக மாற்றி அரசியல் செய்வது தான் தவெக-வின் கொள்கையா? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். பேட்டிகளில் திறமையாகப் பேசி மழுப்பும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இது போன்ற செயல்களுக்கு என்ன பதில் கூறப் போகிறார்? என்றும் கேட்டுள்ளார்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல்தான் உள்ளது தவெக அரசின் செயல்பாடுகள் என்றும் இன்னும் சற்று லோக்கலாக திரைப்பட வசன பாணியில் சொல்லப் போனால் “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” என்று கூறும் வகையில் கட்சி நிர்வாகிகளிடம் இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்ட பிறகும் கூட தொடர்வது எந்த வகையில் நியாயம் என்று முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: ஒவ்வொரு வருடமும் வெள்ளை அறிக்கை குடுங்க.. வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!

தொடர்ந்து பள்ளிச் சிறார்களை டார்கெட் வைத்து அரசியல் செய்யும் இந்த வழக்கத்தை விட்டொழிக்க தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு கடுமையாக அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share