×
 

கொங்கு நகரமா.. கொலை நகரமா.? கேள்விக்குறியான பாதுகாப்பு.! வானதி சீனிவாசன் தாக்கு.!

கொங்கு நகரமா அல்லது கொலை நகரமா என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு குற்றச்சம்பழங்கள் நடப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்சி வருகின்றன. பாலியல் குற்றங்கள், கொலைகள் ஆகியவை நடந்து வருவதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில், கொங்கு நகரம் கொலை நகரமாகிறதா என்று பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

தொழில் நகரம் என்ற பெருமைக்குரிய கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் கொடூர கொலை சம்பவங்களால் பொது மக்களின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது என்று தெரிவித்தார். கடந்த 10 நாட்களில் மட்டும் நான்கு கொடூர கொலை குற்ற சம்பவங்கள் அரங்கேறி கோவை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது என்றார்.

குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும், போதைப்பொருள் பயன்பாட்டால் மாணவர்களுக்குள் ஏற்படும் மோதல்கள் கொலை வரை செல்வது தவெக அரசில் சட்டம் ஒழுங்கின் திறனற்ற செயலையே காட்டுகிறது என்றும் கூறினார். சிறைக்காவலில் இருக்கும் கைதிகளுக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பற்ற சூழல் இருக்கும் பட்சத்தில் காவல் துறையிடமிருந்து பொதுமக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடுத்த பிரதமர் விஜய்.? காங்கிரசுக்கும் ராகுலுக்கும் துரோகம் இல்லையா.? என்ன CM சார்..? விளாசிய அப்பாவு.!

இந்நிலை தொடர்ந்தால் கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து பாதுகாப்பற்ற மாநிலம் என்ற சூழல் உருவாகும் என வானதி சீனிவாசன் எச்சரித்துள்ளார். எனவே காவல்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகளை உனடியாகக் கைது செய்து, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு..! பிரம்மாண்ட தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு... அமைச்சர் கீர்த்தனா உறுதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share