துணைவேந்தர் நியமனத்தில் குடுமிப்பிடி சண்டை..! மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் வைத்த ட்விஸ்ட்..!
பொள்ளாச்சி வழக்கை அதிமுக ஒன்றும் தாமாக சிபிஐ விசாரணைக்கு மாற்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர்கள் நியமனம் செய்யும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் துணைவேந்தர்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி முடித்த உடனேயே ஆளுநர் ஆர். என் ரவி துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தினார்.
துணைவேந்தர்கள் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மதபோதகர் ஜான் ஜெபராஜ்-க்கு நிபந்தனை ஜாமீன்.. போலீஸ் தரப்பு கடும் எதிர்ப்பு..!
பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு முரணாக உள்ளதால் இதனை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தது.
இதையும் படிங்க: சர்ச்சை நாயகன் டிடிஎஃப் பாஸ்போர்ட் கேட்டு மனு..! வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை..!