×
 

9 பேர் இறந்த அதே நாளில் த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்... ஒரே ஒரு கேள்வியில் தெறிக்கவிட்ட திமுக ஐ.டி. விங்க்...!

விஜய்க்கு, நடிகை திரிஷா வாழ்த்து சொல்லவில்லை என்று சமூக வலைதளத்தில் விவாதங்கள் எழுந்தன.

தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் நேற்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் விஜய்க்கு, நடிகை திரிஷா வாழ்த்து சொல்லவில்லை என்று சமூக வலைதளத்தில் விவாதங்கள் எழுந்தன.

இதற்கிடையில் விஜய்யை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திரிஷா 'அன்பாலோ' செய்து விட்டதாகவும் நேற்று செய்திகள் வெளியானது. கடந்த ஆண்டு முதல் நபராக பிறந்த நாள் வாழ்த்து சொன்ன திரிஷா இந்த முறை ஏன் வாழ்த்து சொல்லவில்லை? இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டதா? என்றெல்லாம் கூட ரசிகர்கள் வலைத்தளங்களில் விவாதித்தனர். ஆனால் இந்த விவாதங்களுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டார்.

விஜய்யின் பிறந்தநாளையொட்டி, அவருடன் 'கேக்' வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் 'எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாய் ஆக்கிய நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் நள்ளிரவு 12 மணிக்கு முதல் ஆளாக விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததை குறிப்பிடும் வகையில் 00:00 என்பதையும் திரிஷா பதிவிட்டு இருந்தார். இதற்கிடையே, திரிஷா வெளியிட்டு இருக்க கூடிய இந்த பதிவுக்கு எதிர்மறை விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: நடிகை த்ரிஷாவுடன் இணைந்து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய முதல்வர் விஜய்!

குறிப்பாக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சட்டமன்றத்திற்கு எடுத்து வரப்பட்ட கேக்கை வெட்ட வேண்டாம் என்று விஜய் திருப்பி அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு காரணம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டு 9 பேர் பலியானதும், 60 க்கும் மேற்பட்டவர்கள் உடல் நல பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக விஜய் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்ததாக கூறப்பட்டது.

திருப்பாச்சி படத்தில் உள்ள ஒரு காட்சியில் திரிஷா சாமி ஆடிக்கொண்டு வாடா.. போடா என்று அழைத்து தனது கட்டுக்குள் வைப்பது போல ஒரு காட்சி இடம் பெற்று இருக்கும். இந்தக் காட்சியை பகிர்ந்துள்ள திமுக ஐடிவிங், இதே நாளில் அமோனியா வாயு கசிவால் 9 பேர் உயிரிழந்ததுடன், 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் அவர் அங்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை. இதனால், அவருக்காக தெரிவிக்கப்படும் அனைத்து "பிறந்தநாள் வாழ்த்துகளும்" அர்த்தமற்றதாகவே தோன்றுகின்றன"என்று பதிவிடப்பட்டுள்ளது

இதையும் படிங்க: 4 பெண் அமைச்சர்கள்..? ஒரு பெண்ணையே முதல்வராக்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு..! இன்பத்துரை பதிலடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share