×
 

கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி... போட்டாச்சு CASE! யார் மேல தெரியுமா?

விஜய் பிரச்சார பேருந்தின் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் முதலமைச்ச ஸ்டாலின் தனிநபர் ஆணையத்தை அமைத்தார். அதைத்தொடர்ந்து புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரூர் சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் விஜய் பிரச்சார பேருந்தின் ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. விஜய் பிரசார பேருந்தில் தொண்டர்களின் பைக் மோதிய விவகாரம்

இதையும் படிங்க: பரப்புரையை விடுங்க... இத செய்ங்க தம்பி! விஜய்க்கு சீமான் அறிவுரை...!

தொடர்பாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதியப்பட்டு உள்ளது. கரூர் தவிட்டுப்பாளையம் சோதனைச்சாவடி அருகே விபத்து நடந்த‌து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே கரூர் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விஜயின் பிரச்சாரப்பேருந்தை எந்த நேரத்திலும் பறிமுதல் செய்யலாம் என கூறப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவை அடுத்து கரூர் சம்பவம் புயலை கிளப்பியது. தற்போது விஜய் பிரச்சாரப் பேருந்தின் ஓட்டுனர் மீது வழக்குப் பதியப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: அதெல்லாம் முடியாது! தேவைப்பட்டால் விஜயும் "ARREST"... அமைச்சர் துரைமுருகன் உறுதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share