நொடிக்கு நொடி பரபரப்பு... செங்குத்தாக பிளந்த அதிமுக..! TVK ஆதரவு MLA க்களை சந்தித்த முதல்வர் விஜய்..!
தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தரும் அதிமுக எம்எல்ஏக்களை முதல்வர் விஜய் சந்தித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், அதிமுகவில் உள்ள உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான ஒரு பிரிவு எம்எல்ஏக்கள், தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில் கூடிய நிகழ்வு தமிழக அரசியலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த எம்எல்ஏக்களை முதல்வர் விஜய் சந்தித்த சம்பவம் தவெக அரசின் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். நேற்று முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர்.
சட்டப்பேரவை நிறைவடைந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதிமுக இரண்டாக பிளவு பட்டிருக்கும் நிலையில் ஒரு தரப்பு அதிமுகவினரை விஜய் சந்தித்துள்ளார். சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள சிவி சண்முகம் அலுவலகத்திற்குச் சென்ற முதல்வர் விஜய் அங்கு கூடியிருந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுக்கும் அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்தார்.
இதையும் படிங்க: சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!
முதல்வர் விஜய்க்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். எஸ் பி வேலுமணி எம்எல்ஏக்கள் அனைவரையும் முதல்வர் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தார். குறிப்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை பார்த்து சட்டமன்றத்தில் பதவி ஏற்பின் போது உடைந்து அழுத அதிமுக எம்எல்ஏ மோகனுக்கு நான் இருக்கிறேன் என்று ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கட்சியிலிருந்து நீக்கம்"..! பத்து வருஷ உழைப்புக்கு கிடைச்ச பரிசு..! MLA காமராஜ் ஆதங்கம்..!