வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

அதிர்ச்சி..! தவெக தலைவர் விஜய்- சங்கீதா விவாகரத்து?… கோர்ட்டில் மனு தாக்கல்…!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் - சங்கீதா விவாகரத்து செய்ய மனுத்தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகரும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான திருமண உறவு குறித்து தற்போது பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சங்கீதா, விஜயிடமிருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சங்கீதா, விஜயின் ரசிகையாக இருந்து பின்னர் அவரை மணந்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் அவ்வப்போது எழுந்து வந்தன. குறிப்பாக விஜய் அரசியல் களத்திற்கு முழுமையாகக் களமிறங்கிய பிறகு, சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது, லண்டனில் தங்கியிருப்பதாகக் கூறப்படுவது போன்ற தகவல்கள் இந்த வதந்திகளுக்கு முக்கியமாக அமைந்தன. சமீப காலமாக இந்த விரிசல் மேலும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தகவல் தற்போது தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை. இருப்பினும், இது போன்ற செய்திகள் கடந்த காலங்களில் பலமுறை வதந்திகளாகவே தோன்றி மறைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்.. களமாடும் கட்சிகள்… தவெக செயல்வீரர்கள் கூட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு..!!

ஆனால் இம்முறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுவதால், இது முந்தைய வதந்திகளை விட தீவிரமானதாகத் தோன்றுகிறது. இரு தரப்பினரும் தனியார் வாழ்க்கையை பொதுவெளியில் வைத்து விவாதிக்க விரும்பாதவர்கள் என்பதால், முழு உண்மை என்ன என்பது நீதிமன்ற நடவடிக்கைகள் அல்லது அதிகாரப்பூர்வ அறிக்கை மூலமே தெரியவரும். 

இதையும் படிங்க: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்… அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்… வெளியானது முக்கிய அறிவிப்பு…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी