அட்ரா சக்க... உத்தேச வேட்பாளர் பட்டியல் ரெடி! நேர்காணல் செய்யும் விஜய்...!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றி கழகத்தின் உத்தேச வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் நடத்திய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தமிழக அரசியலில் புதிய அலை எனக் கூறப்பட்ட விஜயின் சுற்றுப்பயணத்தை இந்த சம்பவம் முடக்கிப் போட்டது. கரூர் சம்பவம் நடந்து ஒரு மாத காலம் ஆகிறது.
இதுவரை விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கிடையில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு கரூருக்கு விஜய் செல்வது தொடர்பான திட்டம் ரத்து செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கண்ணீர் விட்டு விஜய் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளை கரூர் சம்பவம் முடக்கியிருந்த நிலையில், 28 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார். கட்சியின் அன்றாட பணிகளை இந்தக் குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் அக்டோபர் 29 ஆம் தேதி கூடியது.
இதையும் படிங்க: பவளவிழா பாப்பா… பாசாங்கு ஆகாது பாப்பா..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட விஜய்…!
தொடர்ந்து சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச் சின்னம் கேட்டு தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தை நாட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றி கழகத்தின் உத்தேச வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வேட்பாளர்களை விஜய் விரைவில் நேர்காணல் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "தேர்தல்ல இதெல்லாம் சகஜமப்பா..." - விஜயின் முதல்வர் ஆசையை நக்கலடித்த அதிமுக மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ...!