×
 

#BREAKING: பிப்ரவரி 13-ல் சேலத்திற்கு வருகிறார் விஜய்!  தவெக பிரச்சாரக் கூட்டத்திற்குப் போலீஸ் நிபந்தனையுடன் அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிப்ரவரி 13-ல் சேலம் சீலநாயக்கன்பட்டியில் பிரச்சாரம் செய்ய, 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி மற்றும் 3 மணி நேர காலக்கெடு போன்ற நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்கள் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி சேலத்தில் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சேலம் மாநகர காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தவெக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், சேலம் மாநகரின் சீலநாயக்கன்பட்டி பகுதியில் பிரச்சாரக் கூட்டம் நடத்தத் தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதனைப் பரிசீலித்த காவல்துறை, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.

வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இந்தப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது. பிரச்சாரக் கூட்டத்தைப் பிற்பகல் 12:00 மணி முதல் மாலை 3:00 மணிக்குள் முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 5,000 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனத் தவெக தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??

கடந்த காலங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் போன்றச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை எனத் தவெக நிர்வாகிகளேத் தெரிவித்துள்ளனர். மேலும், விஜய் அவர்கள் தனது வாகனத்தில் இருந்தபடியேத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் ‘டோக்கன் சிஸ்டம்’ முறையைத் தவெக நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாப்பு மற்றும் உடல்நலன் கருதி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கக் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய்யின் வருகையையொட்டிச் சேலம் மாநகரம் முழுவதும் பலத்தப் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட உள்ளது. 2026 தேர்தலை முன்னிட்டு சேலத்தில் நடைபெறும் இந்த முதல் பெரியப் பொதுக்கூட்டம், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

இதையும் படிங்க: “மக்களின் கைகளில் தவெக தேர்தல் அறிக்கை!” கருத்துகளைப் பெறப் புதிய இணையதளம் தொடக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share