×
 

ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!

ஜெயங்கொண்டம் அருகே  மெய்காவல்புத்தூர் காமராஜர் நகர் பகுதியில் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மெய்க்காவல் புத்தூர் காமராஜ் நகர் பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில்  ஒரு வீட்டில் 3 லிருந்து 5 குடும்பம் வசித்து வருகின்றனர்‌. இதனால் இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்நிலையில் அடிப்படை வசதிகள் மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கேட்டு அப்பகுதி மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட ஆட்சியரகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

பேச்சுவார்த்தைக்கு வரும் அதிகாரிகள் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் எனக் கூறி போராட்டங்களை கலைத்து அனுப்பி வைத்தனர். ஆனால் தற்பொழுது வரை இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. 

இதையும் படிங்க: தேர்தல் வேட்டையில் சிக்கிய பிரபல நகைக்கடை... ரூ.65 கோடி மதிப்புள்ள 46 கிலோ நகைகள் பறிமுதல்... !!

மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பாரி போராட்டமும் நடைபெற்றது. ஆனால் இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர் அதனை அதிகாரிகள் அகற்றக் கூறியதால் அகற்றி இருந்தனர். ஆனால் தற்பொழுது வரை எந்த அதிகாரிகளும் நேரில் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மீண்டும் பதாகையை வைத்தும், வீடுகள் தோறும் கருப்பு கொடிகளை கட்டி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து எந்த அரசியல்வாதிகளோ ஒட்டு கேட்டு உள்ளே வர இயலாது என்றும், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் நடவடிக்கை மேற்கொண்டால் ஒழிய நாங்கள் தேர்தல் புறக்கணிப்பை  நடத்துவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்தல் புறக்கணிப்பில் குறிப்பாக ஏராளமான மகளிர் அணியினர் மகளிர் சுய உதவி குழுவினர், இளைஞர்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெலிவரி வேனுக்குள் பறக்கும் படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... மூட்டை, மூட்டையாய் தங்க, வைர நகைகள்... சிக்கியது எப்படி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share