விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு...!
விருதுநகர் அருகே நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு.
விருதுநகர் அருகே உள்ளது கட்டனார்பட்டி இங்கு கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இது மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசாலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
சரவெடி பின்னும் ஒரு அறையில் திடீரென உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. வெடிச்சத்தம் கேட்ட தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே தப்பி ஓடினர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 23 பேர் உயிரிழந்தனர். அவர்கள் யார் என்பதை அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல்கள் சிதைந்திருந்தது கிராம மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விபத்தில் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), சாரதா (40), திருத்தங்களைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56), சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்த வீரபத்திரன் (45), இவரது மனைவி சங்கிலித் தங்கம் (40), கோவிந்தன் நல்லூரைச் சேர்ந்த அருண்குமார் (23), ஆதிப்பட்டியைச் சேர்ந்த வாழவந்தான் என்பவரது மகன் கதிஷ் (14) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் ஆறு பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: காலையிலேயே அதிரடி ரவுண்ட்ஸ்... அண்ணாநகரை தெறிக்கவிட்ட முதலமைச்சர் மு.கஸ்டாலின்... வாக்கிங் சென்று வாக்கு சேகரிப்பு...!
மேலும் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை தொழிலாளர்கள், தீயணைப்பு துறை மற்றும் காவலர் கள் உட்பட 21 பேர் காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), திருத்தங்களைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56) ஆகியோர் இன்று சாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மதுரை மற்றும் திருநெல்வேலியில் இருந்து 14 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். இதில் அடையாளம் காணப்பட்ட
17 பெண்கள் உட்பட 20 உடல்கள் உடற்கூறாய்வு முடிந்ததாகவும், 4 உடல்கள் அடையாளம் காண முடியவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: விருதுநகர் வெடிவிபத்து கோரம்... சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி... மாவட்ட ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்...!