×
 

சிங்கப்பூர்-ல இருந்து வந்தும் ஓட்டுப் போட முடியல..! ஆதங்கத்தை கொட்டிய குடும்பத்தினர்..!!

சிங்கப்பூரிலிருந்து வந்து ஓட்டு போட முடியவில்லை என்று ஒரு குடும்பத்தினர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

சிங்கப்பூரில் இருந்து வாக்களிக்க வந்தும் ஓட்டு போட முடியாமல் தவித்த பெரம்பூர் வாக்காளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என்று கூறியுள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ஐச் சுற்றி எழுந்த வாக்காளர் பட்டியல் சர்ச்சையை எடுத்துக்காட்டுகிறது.

சென்னை பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த மூன்று பேர், சிங்கப்பூரில் வசித்து வந்த நிலையில், வாக்களிப்பதற்காக சிறப்பாக தமிழகம் வந்திருந்தனர். ஆனால், சிறப்பு தீவிர திருத்ததிற்குக்குப் பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லாததால், அவர்களால் ஓட்டு போட முடியவில்லை.

இந்த அதிர்ச்சியான அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர். அவர்களில் ஒருவரான செந்தில் குமார், தனது மகள்களுடன் சிங்கப்பூரில் வசித்து வந்தவர். வாக்களிப்பதற்காகவே சென்னைக்கு வந்த அவர், வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இல்லாததை அறிந்து ஏமாற்றம் அடைந்தார். "சிங்கப்பூரில் இருந்து வந்தோம்; ஓட்டு போட முடியல" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விசிலுக்கு ஓட்டு போட சொன்ன பாட்டி..! உதயசூரியனுக்கு மாற்றிப் போட்டதாக தேர்தல் அதிகாரி மீது புகார்..!

இந்தப் பிரச்னை, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது ஏற்பட்ட வாக்காளர் பெயர் நீக்கங்கள் மற்றும் திருத்தங்களுடன் தொடர்புடையது. தேர்தல் ஆணையம், இறந்தவர்கள், இரட்டைப் பதிவுகள், முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக லட்சக்கணக்கான பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கியதாகத் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இத்தகைய நீக்கங்கள் அதிகம் பேசப்பட்டன. பல வாக்காளர்கள், முன்பு வாக்களித்திருந்தும் இந்த முறை தங்கள் பெயர் இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: மயிலாப்பூரில் திமுக முறைகேடு..! "தட்டிக் கேட்டா அடிக்கப் பாயுறாங்க"..! தமிழிசை பகிரங்க எச்சரிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share