அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? சாரி சொன்னா போதுமா ஸ்டாலின்.?
திமுகவுக்கு எப்போதுமே மக்களை பற்றி கவலை கிடையாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி உடனோடு வடிவுடைய கோயிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வடிவுடை அம்மனை தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் பாதுகாப்பு கேள்விகுறியாக உள்ளது.
திருவொற்றியூரில் டியூசன் சென்று வீடு திரும்பிய 17 வயது சிறுவன் மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கார சென்னை என மார்த்தட்டிக் கொண்டிருக்கிறார். சாதாரண மழைக்கு கூட மாணவர்கள் சாலையில் நடக்க முடியவில்லை என்றால் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை என்றார்.
தமிழகத்தில் நல்லாட்சி நடப்பது போல் விளம்பரம் செய்கின்றனர். டாஸ்மாக் மூடல், கேஸ் மானியம், கல்விக்கடன் ரத்து, பழைய பென்சன், மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு குறித்து மக்கள் கேட்டால் என்ன செய்வார்.
இதையும் படிங்க: சிகரெட் சூடு, மூளையில் ரத்தக்கசிவு..! நரக வேதனையை அனுபவித்த அஜித்குமார்.. அம்பலப்படுத்திய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்..!
இவர்கள் எதையும் சரியாக செய்யவில்லை. கூலிப்படையை வைத்து கொலை செய்வது அதிகரித்துள்ளது. பள்ளி மாணவரை கடத்துகின்றனர். அனைத்து விதத்திலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. ஆனால், ஓரணியில் தமிழ்நாடு நாங்கள் வீடுதோறும் செல்வோம் என்கின்றனர். மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். திராவிட மாடல் அரசு வீட்டிற்கு செல்ல வேண்டியது தான்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க போகிறோம்.
எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் செல்கிறார். இதற்கு பாஜக பக்க பலமாக இருக்கும்.
எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும். தி.மு.க., விளம்பரப்படுத்த வேண்டிய சூழலில் உள்ளது. பிரசாரம் வாழ்க்கையல்ல. தேர்தல் பற்றியே இவருக்கு கவலை. மக்களை பற்றி கவலைக்கிடையாது. 2026 ல் மக்கள் இவர்களை கவலையடைய செய்வார்கள்.
மடப்புரம் காவலாளி உயிரிழப்பு விவகாரத்தில், இந்த காவல் துறை அதிகாரிகளிடம் அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்.? யாரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? அனைத்து திருட்டு வழக்குகளிலும் இது போன்ற இருக்கிறதா? எந்த விசாரணையும் காவல் நிலையத்திற்குள் நடக்கவில்லை.?
சாரி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதுமா? போலீஸ் ஸ்டேசனில் உண்மை வெளி வருகிறதா? ஆனால், உண்மையான குற்ற வாளிகளை தப்பிக்க வைக்க இது போன்று செய்கின்றனரா என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி அருகே வசமாக சிக்கிய நிகிதா! ரவுண்டு கட்டிய மக்கள்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்!