×
 

அரசு பள்ளியில் சூனிய பொம்மை வைத்து மாந்திரீகம்... பெற்றோர்கள், மாணவர்கள் அச்சம்...!

தொடர்ந்து அரசு பள்ளிகளில் இதுபோல் மாந்திரீகம் போன்ற மர்மமான பூஜைகள் நடைபெற்று வருவது பெற்றோர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை அருகே  நன்னாவரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பொம்மை வைத்து மாந்திரீகம் வழிபாடு மாணவர்கள், பெற்றோர்  அச்சம் அடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நன்னாவரம் கிராமம். இந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நன்னாவரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை  சேர்ந்த  ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அந்த கிராமத்தைச் சேர்ந்த உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு சிறப்பு வகுப்புக்கு சென்றுள்ளனர்.

அப்பொழுது பள்ளி வளாகத்தில் ஒரு பொம்மை வைத்து அதை சுற்றி மஞ்சள் , குங்குமம் கொட்டப்பட்டு மாந்திரீகம் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளிக்கு விரைந்து சென்ற பெற்றோர்கள் பார்த்து மாந்திரீக வேலைகள் செய்ததை கண்டு அச்சம் அடைந்ததனர்.

இதையும் படிங்க: பள்ளிக்கு விடுமுறை கொடுத்து முகாம் நடந்த சம்பவம்! ஏத்துக்கவே முடியாதது... அன்பில் மகேஷ் கடும் கோபம்

மாகாளய அமாவாசை தினம் அன்று இரவு மர்ம நபர்கள் பள்ளி வளாகத்தில் இதுபோன்று மாந்திரீக வழிபாடு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே எம். குன்னத்தூர்  கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாந்திரீக வழிபாடு நடைபெற்ற நிலையில் தற்போது நன்னாவரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியிலும் பொம்மை வைத்து மாந்திரீக வழிபாடுகள் நடைபெற்றுள்ள சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி வளாகத்தில் இப்படியா?... சீருடையுடன் மாணவர்கள் செய்த காரியம்... தீயாய் பரவும் வீடியோ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share