கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடை அரசு மாதிரி பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இடையே அமைந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் தினசரி இந்தக் கடைக்கு முன்பாகவே செல்ல வேண்டிய நிலை உள்ளதால், குடித்துவிட்டு வெளியே வரும் நபர்களின் நடத்தை மற்றும் சாலையில் ஏற்படும் அமைதியின்மை ஆகியவை பெரும் அவதிக்கு வழிவகுத்து வருகின்றன.

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட பின்னணியில், இந்தக் கிராம மக்களும் நடவடிக்கை எடுக்கக் கோரி களமிறங்கினர்.
இதையும் படிங்க: #BIGBREAKING விடிந்ததுமே அதிரடி...!! - 717 டாஸ்மாக் கடைகளை மூட சி.எம். விஜய் உத்தரவு... எங்கெல்லாம் தெரியுமா?
பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ள நிலையில், சிறுவத்தூர் கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூட முடிவு எடுத்துள்ளனர். இதனால் கொந்தளித்துப் போன குடிமகன்கள், எதற்காக டாஸ்மாக் கடையை எடுக்க வேண்டும் என்று கேட்டு ஆவேசமாக நடந்து கொண்டனர். ஒயின் ஷாப் ஐ மூடக்கூடாது என்று குரல் கொடுத்து உள்ளனர். “ஓட்டு போட்டது நாங்க.. ஒயின் ஷாப்பையே எடுப்பீங்களா..?” என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதையும் படிங்க: லீவ்-னு சொன்னதுமே இப்படியா..? டாஸ்மாக்கில் ஒரே நாளில் ரூ.350 கோடி விற்பனை..!!