அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். அருகிலேயே கடற்கரை, கோயில் என அழகிய சூழலை கொண்ட இந்த கோயிலில் திருவிழா காலங்களில் மட்டும் இன்றி சாதாரண நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
அந்த வகையில், கோயிலுக்கு தெற்கே உள்ள நாளைக்கு கிணற்றில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். அதாவது பெரிய கிணற்றுக்குள் ஏழு அடி கொண்ட ஒரு சிறு தீர்த்தக்கிணராக அமைந்துள்ளது. கடலுக்கு மிக அருகில் இருக்கும்போதிலும், இன்னைக்கு கிணற்றில் இருக்கும் தண்ணீர் உப்பு கரிக்காமல் இருப்பது இதன் சிறப்பு அம்சமாகும். மேலும் இதற்கு கந்த பெருமான்தான் காரணம் என்றும் இந்தக் கிணற்றில் புனித நீராடுவோர் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் என்றும் வழிபாட்டாளர்கள் நம்புகின்றனர்.
முன்னதாக சூரபத்மனுடன் போர் முடிந்த பிறகு தனது படை வீரர்களின் தாகத்தை போக்கும் வகையில், முருகப்பெருமான் தனது வேலால் கிணறு ஒன்றை உருவாக்கினார் அந்த கிணறே நாழடி கிணறு என்று புராணங்கள் கூறுகின்றன. இதேபோல் கடற்கரை அருகில் அதிக அளவில் தீர்த்த கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவை அனைத்தும் மணலால் தூர்ந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: என்னை கொல்ல நினைத்தால்.... ஈரானை மொத்தமாக அழித்து விடுவேன்..! டிரம்ப் ஆவேசம்
இந்நிலையில் இந்த கிணற்றை தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தீர்த்த தொட்டியில் தீர்த்தம் நிரப்பப்பட்டு அங்கு பக்தர்கள் குளிப்பதாற்கன ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி செல்லும் வழியில் மாணவிகளை மடக்கி பாலியல் தொல்லை... ஆபாச செய்கையில் ஈடுபட்ட 7 பேரை அலேக்காக தூக்கிய காவல்துறை!