அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ விவகாரம் குறித்து கட்டாயமாக நிரூபிக்கப்பட வேண்டியது தான் ஆதாரமில்லாமல் ஒரு கருத்தை சொல்லி விட முடியாது என திருமாவளவன் கருத்து.
மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், தவெக ஆட்சி தொடராது என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு, அவர் எந்த கோணத்தில் இந்த பிரச்சனை பார்க்கிறார் என தெரியவில்லை எங்களை பொறுத்த வரைக்கும் ஆதரவு அளிக்கின்ற அத்தனைக் கட்சிகளும் வாக்கு தவிர வாய்ப்பில்லை. விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த கட்சிகள் தவெகவிற்கு அளித்த வாக்குறுதிகளை கட்டாயம் காப்பாற்றுவார்கள்.
காங்கிரஸ் எல்லா கட்சிகளுக்கும் முன்னதாகவே தவெக அணிக்கு ஆதரவு மட்டும் அல்லாமல் கூட்டணியில் இணைகிறோம் நாடாளுமன்ற தேர்தல் வரை என்னென்ன தேவைகள் என்பன குறித்து அறிவித்துவிட்டு இந்த கூட்டணி உறவை உறுதிப்படுத்தினார்கள். இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு நல்குகிறார்கள் ஐந்தாண்டு வரை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதை இடது சரிகள் விருப்பம் என்பதை திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி வருகிறார்கள்
இதையும் படிங்க: "விசிக துணை"..! 5 ஆண்டுகள் தவெக ஆட்சி தொடரும்... திருமாவளவன் உறுதி..!
அதே நிலைப்பாட்டை தான் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் முன்னெடுக்கிறது எனவே இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித இடையிலும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்பதை நாங்கள் பெரிதும் நம்புகிறேன் என்றார்.
நாளை நடைபெறும் தவெக தோழமை கட்சிகள் கூட்டம் குறித்த கேள்விக்கு?, புதிய கூட்டணி அறிவிப்பு அங்கு பேசும்போது தான் தெரியும். நான் எப்படி சொல்ல முடியும்?. தேநீர் விருந்து என்ற அடிப்படையில் தான் அழைத்திருக்கிறார்கள். கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறோம்.
அதிமுக எம்எல்ஏ ராஜினாமா என்பது கூட்டணிக் கட்சிகளை நம்பாமல் உள்ளனரா? என்ற கேள்விக்கு, ராஜினாமா செய்பவர்கள் அதிமுகவில் என்ன பிரச்சனை?, எதனால் பதவி விலகுகிறார்கள் என கேட்க வேண்டும். அதுதான் விவாதிக்கப்பட வேண்டும். அதை தாண்டி யூகங்களின் அடிப்படையில் விவாதங்கள் நடக்கின்றன.
அதிமுகவுக்கு என்ன பிரச்சனை?. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் அதிமுகவிற்குள் நிகழும் உட்கட்சி முரண்கள் என்ன? என்பதைத்தான் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு இல்லாமல் யூகங்களின் அடிப்படையில் விவாதங்களின் திசையை மாற்றுகிற முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
6 பேர் இதுவரை அதிமுகவில் பதவி விலகியிருக்கிறார்கள் என்றால், இது அதிமுகவில் நிகழ்கிற மிக முக்கியமான பிரச்சனை தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த கேள்விகளை அதிமுகவினரிடம் வெளிப்படையாக கேட்க வேண்டும் அவர்கள் தான் நாட்டு மக்களுக்கு இதனை தெளிவுபடுத்த வேண்டும்.
பள்ளிகளில் சாதிய ஊக்குவிப்பு தடுப்பு நடவடிக்கை என்பதை வரவேற்கிறேன். ங்கோட்டையன் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்போது சாதியையும் ஒரு தரவாக பதிவு செய்ய வேண்டும் என கருத்து சொன்னபோது கடுமையான எதிர்ப்பு வந்தது அதிர்ச்சியடைந்தோம். தற்போது அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் சாதி அடையாளங்களை ஊக்கப்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை அவருடைய பேச்சின் மூலம் நம்மால் உணர முடிகிறது அது தொடர வேண்டும் என்பது நம்முடைய வேண்டுகோள்.
அமைச்சர் சரத்குமார் மீதான போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, இதில் கட்டாயமாக நிரூபிக்கப்பட வேண்டியது தான் ஆதாரமில்லாமல் ஒரு கருத்தை சொல்லி விட முடியாது. ஆனால் ஒன்று அனைவரும் அறிந்த உண்மை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருக்கிறது.
கஞ்சா மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்கிறது. குக்கிராமங்களில் கிடைக்கிறது . எந்த கட்சி என்று விவாதிப்பதை விட இந்தியா முழுவதிலும் இது பரவுகிறது?, இதற்கு யார் பிண்ணனி என கண்டறிந்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் முக்கியமான சவாலாக உள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துறை மாற்றம் குறித்த கேள்விக்கு அது பற்றி தெரியவில்லை என பதிலளித்தார்
இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு அதிகாரம் இருக்கு! எந்த பாதிப்பும் வராதுனு சொல்லிருக்காங்க! திருமாவளவன் சப்போர்ட்!