தேர்தல் சோதனையில் திடீர் திருப்பமாக 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில், பணத்திற்குப் பதிலாக கிலோ கணக்கில் கஞ்சா சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு போளூர் தொகுதிக்குட்பட்ட வெண்மணி கூட்டு ரோடில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியசாமி தலைமையில் சோதனை நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சிவசங்கர், இருசக்கர வாகனங்களை மட்டும் சோதிக்காமல் பேருந்துகளையும் சோதனையிட அறிவுறுத்தினார். திருப்பதி - நாகர்கோவில் நோக்கி சென்ற ஆம்னி பேருந்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பயணிகள் லக்கேஜ்களைச சோதித்தபோது, ஒரு பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையின்போது பேருந்திலிருந்து இருவர் குதித்து தப்பியோடினர். இதனைத் தொடர்ந்து மற்ற பயணிகளை அதே பேருந்தில் ஏற்றி திருவண்ணாமலையில் இருந்து மாற்று பேருந்தில் மாற்றி அனுப்பப்பட்டனர். அப்போது அந்த பேருந்தில் இருந்து இரண்டு சூட்கேஸ்கள் பேருந்து நிலையத்தில் இறக்கப்பட்டு கேட்பாரற்ற நிலையில் இருந்தது. தொடர்ந்து அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இது குறித்து திருவண்ணாமலை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாகர்கோவிலில் துணிகரம்... 137 சவரன் நகையை ஆட்டையை போட்ட பலே கில்லாடிகள் !! துருவி துருவி விசாரணை..!!
போலீசார் அங்கு வந்து பெட்டியை சோதனை செய்து 20 கிலோ பஞ்சாயத்து தெரிய வந்தது. தொடர்ந்து இது குறித்து போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவுடன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த டிரைவர் அஜீப், மதுரையைச் சேர்ந்த ராஜ் முகம்மது மற்றும் புக்கிங் புரோக்கர் ஆகியோரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை எக்மோரில் அதிரடி! ₹16 லட்சம் மதிப்பிலான 31 கிலோ கஞ்சா பறிமுதல்!