திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, கலப்பட நெய் வாங்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பக்தர்களிடையே பெரும் பேரதிர்வை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் திருப்பதி மற்றும் திருமலையில் ஆய்வு செய்து தீவிர விசாரணைக்கு பிறகு தேவஸ்தான அதிகாரிகள், நெய் சப்ளை செய்த டெய்ரி நிறுவனத்தினர் என 30 க்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் ஆந்திராவில் நடைபெற்ற 7-ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், திருப்பதி கலப்பட லட்டு பிரசாதம் குறித்து 10வது கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. அதில் “திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் நடந்தது சகஜமானது.
இதையும் படிங்க: டாஸ்மாக் இழுத்து மூடப்படும் அதுக்கு பதிலா... தமிழகம் முழுமைக்கும் அதிரடி திட்டத்தை அறிவித்த சீமான்...!
இது குறித்து முழு விசாரணை அவசியம் தேவை” என கேட்டு இதற்கு ஒரு வரியில் பதிலளிக்கும்படி கூறப்பட்டுள்ளது. இதற்கு பல மாணவர்கள் லட்டுவில் கலப்படம் நடந்ததாகவும், இது குறித்து முழு விசாரணை நடத்தி உண்மையை வெளி உலகிற்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஊடகத்தில் இந்த கேள்விதாளுடன் பல்வேறு சர்ச்சை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: பெரும் போருக்கு பெரம்பலூர் ரெடியா? - தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியை மாற்றிய மு.க.ஸ்டாலின்...!