திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு அண்ணாமலையாராக எழுந்தருளிய சிவபெருமானுக்கு அளிக்கப்படும் நைவேத்தியங்களும், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களும் மிகவும் புகழ்பெற்றவை. குறிப்பாக லட்டு, முறுக்கு, அதிரசம், எல்லடை உள்ளிட்ட இனிப்பு மற்றும் மொறுமொறுப்பான பிரசாத வகைகள் பக்தர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன.
இந்தக் கோயிலில் பிரசாதங்கள் பக்தர்களின் பக்தி மற்றும் வேண்டுதல்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு, கோயில் நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றன. லட்டு பிரசாதம் இங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பௌர்ணமி தினங்களில் மட்டும் லட்சக்கணக்கான லட்டுகள் இலவசமாக வழங்கப்படுவது வழக்கம்.

ஒரு லட்சத்து 50 ஆயிரம் லட்டுகள் வரை பக்தர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயிலில் இந்த பிரசாதங்கள் தினசரி அடிப்படையில் கிடைப்பதுடன், கார்த்திகை தீபம், சிவராத்திரி, பௌர்ணமி கிரிவலம் போன்ற சிறப்பு நாட்களில் மேலும் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு தலைதூக்கி உள்ளது. போர் பதற்றம் காரணமாக வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு பெரும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தி.மலையில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை... பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம்..!!
வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. சிலிண்டர்கள் கிடைக்காததால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் லட்டு பிரசாதம் வழங்குவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அதிரசம், முறுக்கு, எல்லடை போன்ற பிரசாதங்கள் வழங்கப்படுவதும் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக பிரசாதங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், சிலிண்டர் தட்டுப்பட்டால் தடைபட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏப்.1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி சட்டம்..!! என்னென்ன மாற்றங்கள் தெரியுமா..??