முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்படாத சாலைப் பணிகளுக்காக முன்கூட்டியே நிதி விடுவித்து, கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராகுமாறு அவருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், எ.வ. வேலு மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.இந்த லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து எ.வ. வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் செக்!! தவெக கதையை முடிச்சாகணும் இடைத்தேர்தலில் தனித்து போட்டி?!
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் ஜூலை 15-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று எ.வ. வேலு சென்னை திரும்பியுள்ளார்.இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. குறிப்பாக, நாளைய தினமே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. இளையராஜாவுக்குப் பேரவைத் தலைவரின் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்க ரூ. 35 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் நிபந்தனைகளுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதிமுக எம்.எல்.ஏக்கள் விலை போய் விட்டார்கள்!! விஜய்க்கு அவசியமில்லை! பட்டென போட்டு உடைத்த துரை வைகோ!!