வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது.

அரசுப்பணியில் சேர வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அதனால் தான் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணபித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தி தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என்ற அடிப்படையில் பல்வேறு அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகளையும் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஜூலை 12 அன்று TNPSC குரூப் 4 தேர்வு, தமிழ்நாட்டில் 3,935 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது. இத்தேர்வில் வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர் (VAO), ஜூனியர் அசிஸ்டண்ட், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பித்த லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிந்த பிறகு, விடைத்தாள்கள் மதிப்பீட்டிற்காக சேகரிக்கப்பட்டு மையப்படுத்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில், சேலத்தில் இருந்து சென்னைக்கு விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் அனுப்பப்பட்டபோது, அவை முறையாக சீல் வைக்கப்படாமல், ஆங்காங்கே உடைந்த நிலையில் இருந்ததாக ஒரு தகவல் வெளியானது.

இதையும் படிங்க: Wow… திருப்தியான பயணம்… முதலிடம் பிடித்த சென்னை மெட்ரோ…!

இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக, TNPSC ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு, விடைத்தாள்கள் அட்டைப் பெட்டிகளில் கொண்டு செல்லப்படவில்லை என்று தெளிவுபடுத்தியது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதி இருந்தனர். தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் http://tnpsc.gov.in என்கிற இணையதளத்தில் தங்களது பதிவு எண்களை உள்ளீடு செய்து முடிவுகளைப் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை… தடையில்லா மின்சாரம்!… தமிழக அரசு உத்தரவு…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी